முன் நாள் அமைச்சரும் தற்போது மகிந்தரை விட்டுப் பிரிந்து, எதிரணியில் இணைந்துள்ளவருமான
நவீன் திஸாநாயக்க பல அதிரடி தகவல்களை வெளியிட்டு வருகிறார். இறுதிப்போர் நடைபெற்றவேளை
கோட்டபாய ராஜபக்ஷவுடன் நேரடித்தொடர்பில் இருந்தது அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனம்
தான். அவர்களே புலிகள் தொடர்பான பல தவகல்களை கோட்டபாயவுக்கு தெரிவித்தார்கள். ஆனால்
தற்போது அமெரிக்கா ஆதரவில் தான் எதிரணி இயங்குகிறது என்று அரசாங்கம் மறைமுகமாக குற்றஞ்சாட்டி
வருகிறது. இதில் எந்த ஒரு உண்மையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். எதிரணிக்கு கட்சி
தாவாமல் இருக்க ஆளுக்கு சுமார் 1 கோடி ரூபாவில் இருந்து 10 கோடி ரூபாவரை கொடுக்கப்படுகிறது.இதனை நான் நன்றாக அறிவேன். இவ்வாறு பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் யார் ? பணத்தை பெற்றுக்கொள்ளாதவர்கள் யார் என்பது எல்லாம் என்னிடம் பட்டியலாக உள்ளது. அதனை நான் விரைவில் வெளிவிடுவேன் என்று, நவீன் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் அணல் பறக்கும் செய்திகள் வந்துகொண்டு இருக்கிறது. முன்னர் அரசாங்கம் தமக்கு எந்த நாட்டின் உதவியும் கிடைக்கவில்லை. நாம் தான் புலிகளை அழித்தோம் என்றார்கள். ஆனால் தற்போது முன் நாள் அமைச்சரே அமெரிக்கா தான் உதவிகளை வழங்கியது என்று விடையத்தை போட்டு உடைக்கிறார்.
மகிந்தர் பாடு, படு திண்டாட்டமாக தான் உள்ளது. இதேவேளை ஜாதிக ஹெல உறுமைய கட்சி தனது முழு ஆதரவையும் எதிரணிக்கு கொடுத்துள்ளது. முஸ்லீம்களும் தமிழர் கட்சிகள் மட்டுமே திரிசங்கு சொர்கத்தில் நிற்பதைப் போல உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
source:athirvu
No comments:
Post a Comment