Monday, February 02, 2015

மகிந்தரின் உற்ற நண்பருக்கு கொழும்பில் விழுந்த பேரிடி: கலேஷ் ஷர்மா காலி !

இலங்கையில் பொதுநலவாய நாடுகளின்(காமன் வெலத்) கூட்டத்தை நடத்தவேண்டும் , அதனூடாக அதன் அடுத்த தலைவராக மகிந்த வரவேண்டும் என்று பல குறுக்கு வழிகளை கையாண்டவர் தான் இந்த கமலேஷ் ஷர்மா. இவர் ஒரு இந்தியர் மற்றும் பொதுநலவாய நாடுகளின் செயலாளராகவும் உள்ளார். இவர் நேற்றைய தினம் இலங்கை சென்றுள்ளார். இவர் திடீரென இலங்கை செல்ல என்ன காரணம் என்று பலரும் எண்ணி இருக்கலாம். கமலேஷ் ஷர்மாவின் உற்ற நண்பரான மகிந்த ராஜபக்ஷ தற்போது அதிகாரத்தில் இல்லை. இன் நிலையில் இவர் மகிந்தருக்கு உதவிபுரியவே , இலங்கை சென்றதாக தகவல்கள் கூறுகிறது.


ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்து , மகிந்த குடும்பத்தை பழிவாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளவும். மேலும் பொதுநலவாய நாடுகளின் தலைவர் பதவியை மைத்திரி ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் கூறவே கமலேஷ் ஷர்மா சென்றுள்ளார். ஆனால் அவரால் இதுவரை மைத்திரிபாலவை சந்திக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அத்தோடு அவருக்கு எதுவித சிறப்பான வரவேற்ப்பும் கொடுக்கப்படவில்லை. மேலும் இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சர் மங்கள சமரவீரவே கமலேஷ ஷர்மாவை சந்தித்து உரையாடியுள்ளார்.

கமலேஷ் ஷர்மா யார் யாரை எல்லாம் சந்திக்கவேண்டும் என்று கேட்டிருந்தாரோ , அவர்களில் பலரை சந்திக்க தற்போதைய இலங்கை அரசு அனுமதிக்கவில்லை என்ற செய்தியும் கொழும்பில் இருந்து கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் கமலேஷ் ஷர்மாவின் இலங்கை விஜயம் புஸ்வானம் ஆகிவிட்டது.

No comments:

Post a Comment