
இதில் அரசியல் செய்வதையே தமிழகத்தில் சில கட்சிகள் வாடிக்கையாக கொண்டுள்ளன. இப்படி இருந்தால், எப்படி பிரச்சினையை தீர்க்க முடியும்? குறிப்பாக, இலங்கை தமிழர் விடயத்தில், வைகோவால் பிரச்சினைகள் தான் ஏற்படுகின்றன. பிரச்சினையை புரிந்து கொள்ளாமல், உணர்ச்சிகரமாக பேசுகிறார். சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு வெடிக்கிறார், அழுகிறார். எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் நடந்தால், என்ன செய்வது? எப்படி பிரச்சினையை தீர்க்க முடியும்? இவ்வாறு, பிரதமர் கேள்வி எழுப்பினார்.
உடனே குழுவினர், ´ம.தி.மு.க.,வை சேர்ந்த பிரதிநிதியும் இங்கே வந்திருக்கிறார்´ என்றனர். அப்போது குறுக்கிட்ட, முன்னாள் எம்.பி., கணேசமூர்த்தி, ´நான் தான் இங்கே ம.தி.மு.க., சார்பில் வந்திருக்கும் பிரதிநிதி´ என்றார். ´இருக்கட்டும், நான் உண்மையைத்தான் சொல்கிறேன்´ என்றார் பிரதமர். இறுதியாக, ஆந்திர வனப் பகுதியில், தமிழக கூலித் தொழிலாளிகள், 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். டெல்லி பேரணியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்கு கண்ணீர் சிந்திய நீங்கள், இதை கண்டுகொள்ளவில்லை, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்´ என, தமிழக குழுவினர் கேட்டனர்.
அதற்கு பிரதமர் எந்த உத்தரவாதமும் தரவில்லை. இறுதியாக, ´தமிழகத்தை சேர்ந்த நீங்கள் எல்லாம் குழுவாக வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது, அதன் காரணமாகவே, என்னால் விஜயகாந்தை சந்திக்க முடிந்தது´ என்று பிரதமர் கூறியதும், அனைவரும் சிரித்தனர்.
No comments:
Post a Comment