Wednesday, May 13, 2015

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரம்! இலங்கை காவல்துறை மௌனமாம்!!


இனஅழிப்பு நினைவேந்தல் நிகழ்வினை முள்ளிவாய்க்காலில் மே 18ம் திகதி நடத்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா ஆகியோர் திட்டமிட்டு இலங்கை காவல்துறையிடம் அனுமதி கேட்டிருப்பதாக தெரியவருகின்றது.

எனினும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லையெனவும் அனுமதிக்காக அவர்கள் காத்திருப்பதாகவும் தெரியவருகின்றது.

அதேபோன்று வடமாகாணசபையினிலும் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுக்க முதலமைச்சர் ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகளினில் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதனிடையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் யாழ்.மாவட்டத்திற்கான நிகழ்வு எதிர்வரும் 15ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்.முற்றவெளியினில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தலைவரும் வடமாகாணசபை உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.அன்று காலை தமிழாராய்ச்சி மாநாட்டினில் உயிரிழந்தவர்கள் நினைவு தூபி முன்னதாக அனைவரையும் ஒன்று கூடுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இன அழிப்பின் நினைவேந்தல் வாரம் நேற்று முதல் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்ற நிலையினில் அதனை மாவட்டங்கள் தோறும் முன்னெடுக்கப்போவதாக கே.சிவாஜிலிங்கம் அறிவித்திருந்தது தெரிந்ததே. 
source:pathivu


No comments:

Post a Comment