Friday, May 22, 2015



மகிந்த ராஜபக்ஷ கல்லூரியில் படித்து முடித்த காலகட்டத்தில் , ஒருமுறை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது கல்லூரியில் நடந்த கொலை ஒன்றில் அவர் சம்பந்தப்பட்டு இருந்ததாக அப்போதைய காலகட்டத்தில் பரவலாகப் பேசப்பட்டது. இருப்பினும் அவர் அரசியல் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டவேளைதான் கைதானார் என்று அவரது ஆதரவாளர்கள் இன்றுவரை கூறிவருகிறார்கள். ஆனால் அன்றைய தினத்தில் அவர் ஒரு கொலையோடு சம்பந்தப்பட்டு இருந்ததாகவும் , தனது அப்பாவின் அரசியல் செல்வாக்கை வைத்து அவர் விடுதலையானதாகவும் கூறப்படுகிறது.
குறித்த புகைப்படத்தை இன்ரர் நெட்டில் பரவிடாது மகிந்தரது ஆதரவாளர்கள் பாதுகாத்தும் வந்துள்ளார்கள். ஆனால் தற்போது அது மீடியாக்களில் வெளியாக ஆரம்பித்துள்ளது. இந்த பழைய வழக்கை மீண்டும் தூசிதட்டி எடுக்க சில தரப்புகள் முனைப்புகாட்டிவருவதாக கூறப்படுகிறது. கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே கொலைசெய்யும் அளவுக்கு இவர் இருந்துள்ளார். ஏதோ ஜனாதிபதியாக வந்த உடன் தான் அல்லது நேற்றைக்கு இன்றைக்கு தான் இவர் மனிதர்களை கொலைசெய்தார் என்று இல்லை. இவர் அப்பவே ஆரம்பித்துவிட்டார் போல இருக்கே ?
source:athirvu

No comments:

Post a Comment