
மேற்கு வங்காள மாநிலம், ஹவுரா மாவட்டம் பாலியில் பிரணாப் அதிகாரி (50) என்பவர் அரசுப் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், பிரணாப் அதிகாரி பெருமளவில் லஞ்சம் வாங்கி குவிப்பதாக கட்டட ஒப்பந்தக்காரர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், அவரது வீட்டிற்குள் அதிரடி சோதனையிட்டனர். அப்போது, அவர் வீட்டின் படுக்கை அறை, கழிவறை, தரைத்தளம் என பல்வேறு இடங்களில் பணத்தை கட்டு, கட்டாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தண்ணீர் தொட்டி, குளியலறையின் மேற்பகுதி ஆகியவற்றிலும் பணக்கட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அனைத்தும், 100, 500, 1000 கட்டுகளாக கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர்த்து வங்கிகளில் நிலைத்த வைப்புகளில் லட்சக் கணக்கில் பணம் போட்டு வைத்திருந்ததற்கான ஆவணங்களும், தங்கம், வைர நகைகளும் கைப்பற்றப்பட்டன. பணத்தை எண்ணுவதற்கு திணறிய அதிகாரிகள், பிறகு மூன்று பணம் எண்ணும் இயந்திரத்தை வரவழைத்து எண்ணினார்கள். அப்போது, இதன் மதிப்பு 24கோடி ரூபாய் இருப்பதாக அதிகாரிகள் கூறினர். இதற்கிடையில் பிரணாப்பின் மகன் தப்பியோட முயன்றார். பின்னர், அதைத் தொடர்ந்து என்ஜினீயர் பிரணாப் அதிகாரியையும், அவரது மகனையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களை ஒரு ரகசிய இடத்தில் வைத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்
No comments:
Post a Comment