Tuesday, October 27, 2015

உனது ஆண் உறுப்பை தான் அறுக்கவேண்டும்- கருணாவை தூசண வார்த்தையால் திட்டி தீர்த்த கோட்டபாய ?

கருனாவுக்கும் கோத்தபாயவுக்கும் இடையில் நடந்த துாசண சம்பாசனை தொடர்பில் கருனாவின் பாதுகாப்பு உத்தியோகத்தராக இருந்த இராணுவக் கோப்ரல் வெளியிட்டதாகத் தெரிவித்து சிங்கள இணையத்தளம தெரிவித்துள்ள தகவல்கள் இது… வன்னியில் இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயம் புலிகள் கல்மடுக் குளத்தை உடைத்து அங்கு இராணுவத்திற்கு உயிர்ச் சேதங்கள் ஏற்படுத்தியிருந்தார்கள். கல்மடுக்கட்டு அணை உடைந்து வெள்ளம் ராணுவத்தினர் பக்கம் சென்றதால், அவர்கள் தமது பங்கரில் இருந்து வெளியே வர புலிகளின் ஸ்னைப்பர் பிரிவு அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் கேணல் தரத்தில் இருந்த 3 அதிமுக்கிய அதிகாரிகள் மண்டையைப் போட்டார்கள்.
விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரிந்து அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருந்த கருனாவின் காட்டிக் கொடுப்பிலும் கருனாவின் ஓரிரு திட்டமிடலிலுமே அப் பகுதியில் பல பிரிவுகளாக இராணுவ நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தது. கருணா கொடுத்த ஆலோசனை என்னவெனின் புலிகளை ஓயாது தாக்கிக் கொண்டிருங்கள் என்பதும் அவர்களுக்கு ஒரு இடைவெளியை கொடுத்தால் அவர்கள் மீண்டும் கடுமையாக தாக்குவார்கள் என்பதுமே. இதே போல் பல திட்டங்களை வகுத்து இராணுவத்தின் முன்னேற்றத்திற்கு உதவி புரிந்து வந்தான் கருணா. இந் நிலையில் கல்மடுக்குள அணைக்கட்டு புலிகளால் உடைத்து விடப்பட்டு சில இழப்புகள் ராணுவத்திற்கு ஏற்பட்டது. இதனைக் கேள்விப்பட்ட கோத்தபாய அதிர்ச்சியடைந்து கருணாவைத் தொடர்பு கொள்வதற்கு முயன்றார்.

அந் நேரத்தில் கருணாவிடம் இருந்து தொலைபேசியில் எந்தவித பதிலும் வரவில்லை. உடனடியாக கருணாவின் பாதுகாப்புப் பிரிவில் இருந்த தனது ஒற்றனான இராணுவ கோப்ரலுடன் தொடர்பு கொண்டு கருணா எங்கே எனக் கேட்டுள்ளார் கோத்தபாயா… அந்நேரத்தில் கருணா ஒரு சிங்கள யுவதியுடன் ஆராய்சிகள் நடாத்திக் கொண்டிருந்துள்ளார். இதனை இராணுவ கோப்ரல் கோத்தபாயவுக்கு தெரியப்படுத்தி கருணா ஒரு சிங்கள யுவதியை அறைக்குள் தனிமையில் சந்தித்ததுக் கொண்டிருப்பதாக தெரிவித்த போது கோத்தபாய கடும் கோபமடைந்து அறையைத் திறந்து போனை அவனிடம் கொடு என்று கோப்ரலுக்கு கட்டளையிட்டாராம். உடனே கோப்ரல் அதைக் கேட்டு கதவைத் தட்டி கருணாவை கூப்பிட்ட போது ,கருணா கதவைத் திறந்து கோப்ரலை ஏசிய போது கோப்ரல் தொடர்பில் உள்ளது யார் என தெரிவித்துள்ளார்.
கருணாவும் உடனடியாக தொலைபேசியை வாங்கி காதில் வைத்த போது பச்சைத் துாசணத்தில் காதில் இரத்தம் வரும் அளவிற்கு கருணாவை கோத்தபாய ஏசியுள்ளார். இறுதியில் ‘பொம்புளைகளுடன் அஅஅஅ வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் உன்னுடையதைப் புடுங்கி எறிந்துவிடுவேன்‘ என ஏசியதாகத் தெரியவருகின்றது. கோத்தபாயாவினால் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்ட குறித்த இராணுவக் கோப்ரலை பின்னர் கருணா தன்னிடம் இருந்து நீக்குவதற்கு படாதபாடுபட்டு நீக்கியதாகத் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment