Saturday, October 31, 2015

இராணுவத்தையும் தமிழ் கைதிகளையும் ஒப்பிடுவது வேடிக்கையானது- விக்கினேஸ்வரன் !

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் இராணுவத்திற்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று இரண்டு தரப்புக்களையும் ஒப்பிடுவது வேடிக்கையானது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். சட்டத்தின்படி அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குவதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்த அவர் அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் ஜே.வி.பியினருக்கு அவ்வாறு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜே.வி.பின் காலத்தில் மிகவும் கெடூரமான வேலைகளை செய்தவர்களுக்குகூட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் எமக்கு ஏன் பொதுமன்னிப்பு வழங்கவில்லை என்றும் தமிழ் கைதிகள் கேள்வி எழுப்பியதையும் அவர் நினைவுபடுத்தினார்.
சிலர் அரசியல் கைதிகளின் விடயத்தில் அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்தால் இராணுவத்தினருக்கும் பொது மன்னிப்பு வழங்குமாறு கோருவது சிரிப்பிற்கிடமானது என்று தெரிவித்த அவர் தமிழ் கைதிகள் குற்றவாளிகல்லர் என்றும் சுட்டிக்காட்டினார். அரசியல் கைதிகள் இவ்வளவு காலமும் சிறையில் வாடுகின்ற நிலையில் அதனால் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நிலையில் அவர்களையும் இனி வரபோகும் குற்றவாளிகளையும் சம்பந்தப்படுத்திப் பேசுவது நகைப்பிற்கிடமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.source:athirvu

No comments:

Post a Comment