Monday, February 08, 2016

முல்லையில் மாயமாக மறைந்த ராணுவ முகாம்கள்- இரவோடு இரவாக அகற்றப்பட்டது !



ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் வடகிழக்கிற்கு நேற்று விஜயம் மேற்கொள்ளும் நிலையில் முல்லைத்தீவில் காணப்பட்ட முகாங்கள் பலவற்றை தற்காலிகமாக இராணுவத்தினர் அகற்றியுள்ளனர். அவர்கள் வெள்ளிக்கிழமை இரவே முகாம்கள் பலவற்றை உடனே அகற்றிவிட்டார்கள் என்று நேரில் பார்த்த சாட்சியங்கள் பலர் அதிர்வுக்கு தெரிவித்துள்ளார்கள்.
மக்களின் சிவில் வாழ்வுக்கு இடையூறாக கடந்த காலத்தில் காணப்பட்ட இராணுவமுகாங்கள், காவலரண்கள், புலனாய்வு முகாங்களை இராணுவத்தினர் நேற்று முந்தினம் இரவு முதல் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஒட்டுசுட்டான் பகுதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் 64ஆவது படைப்பிரிவின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சிவில் பாதுகாப்பு முகாமை படையினர் தற்காலிகமாக அகற்றியுள்ளனர்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிவில் பாதுகாப்பு இராணுவ முகாம் மற்றும் புலனாய்வு இராணுவமுகாம் ஆகியவற்றையும் இவ்வாறு இராணுவத்தினர் அகற்றியுள்ளனர். ஆனால் இவை அனைத்தும் , நாளை அல்லது நாளை மறுதினம் மீண்டும் முளைத்து விடும். source:athirvu:[ Feb 08, 2016 12:00:00 AM | வாசித்தோர் : 14010 ]

No comments:

Post a Comment