
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவை தாம் வரவேற்பதாக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் அவரது அரசாங்கமும் இலங்கை தமிழர்களை ஏமாற்றியுள்ளன.
இந்தநிலையில், உலக சமாதான பேரவையான ஐக்கிய நாடுகள் சபையும் அதன் செயலாளரும் அனைத்தையும் இழந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் வகையில் மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை வரவேற்கதக்கது என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம், குறித்த நிபுணர்கள் குழுவுக்கு வீசா வழங்க மறுப்பு தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்துரைத்துள்ள அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதனையும் மறைக்காமல் நடக்குமானால், தவறுகளை தவிர்க்கக்கூடியதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
எனவே இலங்கை அரசாங்கம், எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல், ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்களை நாட்டுக்குள் அனுமதிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment