
திருமலையில் இரண்டு இந்துக்களின் ஆலயங்களை இடிக்க ஸ்ரீலங்கா முயற்சி
திருகோணமலை பிளட்டினம் பொயின்டில் அமைந்துள்ள இராணுவ முகாம் உள்ள இடத்தில் அமைந்துள்ள ஆஞ்சிநேயர் ஆலயம் மற்றும் ஓர்சில் கடற்கரையில் அமைந்துள்ள விஸ்ணு ஆலயம் என்பனவே அகற்றப்படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகின்றது.
கிழக்கே திருகோணமலையில் அமைந்துள்ள, இரண்டு இந்து ஆலயங்களை அகற்றுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்வதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பில் உள்ள தாந்தாமலை முருகன் ஆலய பகுதியில் உள்ள இராணுவ முகாமை விஸ்தரிப்பதற்கும் படையினர் முயல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறே, வன்னியிலும் பல தேவாலயங்களில் படையினர் நிலைகொண்டிருப்பதாக அண்மையில் அங்கு சென்று திரும்பியிருந்த யாழ்ப்பாண ஆயர் வணக்கத்துக்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment