Sunday, September 19, 2010

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக தமிழ்கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்:-எரிக்சொல் கெஹ்ம்.

இலங்கைத் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் உரிமை கிடைக்கவேண்டும் என்பதில் நோர்வே உறுதியாக இருக்கின்றது என்று நோர்வேயின் உள்நாட்டு அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் சமாதானச் செயற்பாட்டாளருமான எரிக்சொல் கெஹ்ம் தெரிவித்துள்ளார். நேற்று ஒஸ்லோவில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே எரிக் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமெரிக்காவிற்கான பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவை நியுயோர்க்கில் தான் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ள எரிக் சூல் ஹெய்ம்,
தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் உரிமை கிடைக்கவேண்டும் என்பதில் தமது நாடு உறுதியாக இருப்பதாகவும், தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக தமிழ்கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment