Friday, September 24, 2010

விடுதலைப்புலி ஆதரவாளர்களென குற்றச்சஞ்சாட்டப்பட்டுள்ள இருவரை அமெரிக்காவிற்கு நாடுகடத்த வேண்டாம்:கனடிய நீதிமன்றத்தில் கோரிக்கை

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அமெரிக்காவினால் வேண்டப்படும் இருவரின் நாடு கடத்தல் நடவடிக்கை உத்தரவினை இடை நிறுத்துமாறு கனேடிய நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதீபன் நடராஜா மற்றும் சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரே குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் கடந்த வருடத்தில் கனேடிய அதிகாரிகளிடம் சரணடைந்தனர்.

இந்தநிலையில் இவர்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து தீர்ப்பினை மறு பரிசீலனை செய்யுமாறு இவர்களின் வழக்கறிஞர்கள் டொரன்டோ மேல் முறையீட்டு நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.

எப்படியிருப்பினும் இவர்களுக்கு எதிரான தகவல்கள் இருப்பதன் காரணமாக பெரும்பாலும் கனேடிய அரசாங்கம் இவர்களை அமெரிக்காவிற்கு நாடு கடத்தும் எனவே எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் 10 லட்சம் டொலர் பெறுமதியாக ஏவுகணைகள் மற்றும் ஏகே 47 தானியக்க சுடு படைகலன்களை தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு விநியோகித்தாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதுதவிர அவர்களுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கைகளிலும் பாரிய அளவில் செற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்கள சார்பான வழக்கறிஞர் ஜோன் நொரிஸ் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டிற்கான ஆதாரம் எதுவும் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment