Sunday, September 19, 2010

குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்து விசாரணை நடத்து கனடியத் தமிழர்.

ஐ.நா. சபையில் உச்சி மாநாடு வரும் 20ந் தேதி முதல் 22ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ராஜபக்சே பங்கேற்று பேச உள்ளார்.

இதற்காக ராஜபக்சே தலைமையிலான உயர் மட்டக்குழு அமெரிக்கா சென்றுள்ளது.அமெரிக்கா வந்துள்ள போர்க் குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்து, அவர் மீது போர் குற்ற விசாரணை நடத்தக்கோரி கனடியத் தமிழர் தேசிய அமைப்பினர், டொரன்டோவில் அமைந்துள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் முன் கோஷங்கள் எழுப்பினர்.

கோசங்களை எழுப்பிய மக்கள், டொரண்டோ நகர மண்டபம் வரை ஊர்வலமாகச் சென்று மீண்டும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தினை வந்தடைந்தனர்.

No comments:

Post a Comment