தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் கிளிநொச்சி மாவட்ட அமர்வுகளில் கலந்து கொண்டு செய்தி சேகரிப்பதற்கு பி.பி.சி செய்திச் சேவைக்கு அரசினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆணைக் குழுவின் அமர்வுகள் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமாகின.நாளையும், நாளை மறுதினமும் கூட இவ்வமர்வுகள் இடம்பெறும்.
ஆனால் இவ்வமர்வுகளில் பி.பி.சி கலந்து கொண்டு செய்தி சேகரிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பி.பி.சி இச்செய்தியை உறுதிப்படுத்தி உள்ளது.
ஆயினும் இத்தடைக்கான காரணத்தை அமைச்சு தெரிவிக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment