Friday, October 08, 2010
இலங்கை இனவெறி அதிபர் ராஜபக்சேயின் ஐநா பயணம் குறித்து சிங்கள இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐநா சபையில் இலங்கை அதிபர் ராஜபக்சே பேசிய போது உலகத் தலைவர்கள் பலர் புறக்கணித்துவிட்டதாகவும், இதனால் அவர் காலி அரங்கில் உரை நிகழ்த்தியதாகவும் அந்த இணையதளம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச அரங்கில் இலங்கைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது மாநாட்டில் கலந்து கொண்ட ராஜபக்சேவை உலகத் தலைவர்கள் எவரும் சந்திக்க ஆர்வம் காட்டவில்லையாம். இந்த மாநாட்டையொட்டி இலங்கை ஒரு பெரிய விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொள்ள 100 நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் ராஜபக்சே. ஆனால் ஒரே நாட்டு தலைவர் மட்டுமே விருந்துக்கு வந்திருந்தார். அவர் ஈரானின் முகமது அகமத் நிஜாதீன். தேர்தலில் பெரும் மோசடி செய்து ஆட்சியைப் பிடித்தவர் என்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ளவர் இந்த முகமத் என்பது குறிப்பிடத்தக்கது. விருந்து வந்த அவரும் கூட மூன்றே நிமிடம் மட்டும்தான் இருந்தாராம். இலங்கையைத் தாங்கிப் பிடித்து, அதன் போர்க்குற்றத்தை மறைக்க உதவும் இந்தியா , சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தலைவர்கள் கூட இந்த விருந்தைப் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.கடைசியில் இலங்கை அரசின் சிங்கள அதிகாரிகள்தான் கடைசியில் இந்த விருந்தைச் சாப்பிட்டு முடித்தார்கள் என்றும்,இந்த சம்பவம் இலங்கைக்கு பெரும் அவமதிப்பு என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. அதேபோல, ஐநா சபையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பேசிய போது தலைவர்கள் அனைவரும் வந்திருந்ததால் அரங்கம் நிரம்பி வழிந்தது. ராஜபக்சே பேசியபோது, அரங்கமே கிட்டத்தட்ட காலியாகிவிட்டிருந்தது. ராஜபக்சேயுடன் இணைந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளக் கூட யாரும் ஆர்வம் காட்டவில்லையாம்! இந்தப் பயணத்துக்கான மொத்த செலவு மட்டும் 140 மில்லியன் டாலர்கள் என்று ஸ்ரீலங்கா கார்டியன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment