நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது விடுதலைப்புலிகள் இயக்க தேசியத்தலைவர் பிரபாகரன் பற்றிய கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. |
கே- தமிழீழத்துக்காக, தமிழர்களுக்காக எவ்வளவு காலத்திற்கு நீங்கள் போராடுவீர்கள்? ப- ஒரு மூன்று மணி நேர சினிமாவில் ஆரம்பக் காட்சியில் தந்தையை கொன்ற வில்லனை கடைசியில் கொல்லும்போது கைதட்டுகிறீர்கள். ஒரு இனத்தையே அழித்ததை எப்படி மறந்துவிட முடியும். ஈழ மக்களுக்காக எந்நாளும் போராடுவோம் என நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் இந்திய தமிழ் திரைப்பட இயக்குனருமாகிய சீமான் தெரிவித்துள்ளார். கே- தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இறந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்தன. அச்செய்தி உண்மையானதா? ப- பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்பது உங்களுக்கு எப்படி தெரியும். பிரபாகரன் இறந்துவிட்டார் என்று அதற்கு சிங்களன் 20 கதை சொல்லுகிறான். அதை எல்லாம் நம்பாதீர்கள். ஈழ விடுதலைக்காக இவ்வளவு தூரம் போராடியவர் அவ்வளவு சீக்கிரம் அந்த போராட்டத்தை விட்டு போகமாட்டார் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையில்தான் நாங்கள் வேகமாக இயங்குகிறோம். கே- இறுதி யுத்தத்தின் போது என்ன நடந்தது ? அங்கிருந்த புலிகள் தப்பியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன, அதுபற்றி....! ப- என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. அதனால் எல்லோரும் அமைதியாகத்தான் இருக்க வேண்டும். இறுத்திக் கட்டப்போரில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. கூட நின்றவர்களுக்குகூட கூட தெரியாது. அப்படியிருக்க யாரும் அது பற்றி சொல்லுவது சரியல்ல. என்னாலும் சொல்லமுடியாது. கே-தலைவர் பிரபாகரன் இருக்கின்றார் என நீங்கள் நம்புகின்றீர்களா?ப- என் அண்ணன் இருப்பதாக ஏன் நினைக்கிறேன் என்றால், எனக்கு என் அண்ணன் இறந்துவிட்டார் என்று நம்பகமான இடத்தில் இருந்து தகவல் வரவில்லை. அதனால் நம்புகிறேன் அவர் இன்னமும் உயிருடன் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார் என. கே- தமிழ் மக்களுக்கு இத்தொலைக்காட்சி பேட்டியூடாக ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா?ப- இப்போது எது சொன்னாலும் அது வரலாற்றுப்பிழையாகிவிடும். அதனால் பொறுத்திருங்கள். யார் சொல்லுவதையும் நம்பாதீர்கள்.காலம் பதில் சொல்லும். |
Friday, December 24, 2010
ஈழ விடுதலைக்காக எவ்வளவோ தூரம் போராடியவர் அவ்வளவு சீக்கிரம் போகமாட்டார் - சீமான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment