Tuesday, January 04, 2011

வடபகுதி தொடரூந்துசாலை புனரமைப்பு – 90 மில்லியன் டொலர் ஊழல் - பின்னனியில் கோத்தா


வடபகுதியில் காங்கேசன்துறையில் இருந்து பளை வரையிலுமான தொடரூந்து சாலை புனரமைப்புக்கு 60 மில்லியன் டொலர்களே செலவாகும் என கணிப்பிடப்பட்டபோதும், அதனை 150 மில்லியன் டொலர் ஒப்பந்த அடிப்படையில் சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா இந்தியாவுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் மூலம் 90 மில்லியன் டொலர்கள் ஊழல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தொடரூந்துசாலை புனரமைப்பு ஒப்பந்த்தில் சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளரும், இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப்குமாரும் ஒப்பமிட்டுள்ளனர்.

இதனிடையே, காங்கேசன்துறை துறைமுகம் மற்றும பலாலி வான்படைத்தளம் ஆகியவற்றை இந்தியாவிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தங்களும் கடந்த 29 ஆம் நாள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்காலத்தில் இந்த இரு தளங்களையும் இந்தியாவே பராமரித்து வரும் என அவை மேலும் தெரிவித்துள்ளன.
source:www.yarl.com
pathivu

No comments:

Post a Comment