Tuesday, January 04, 2011

முன்னாள் விடுதலைப் புலிகள் சமூகத்தில் மீண்டும் கலப்பதில் தாம் சில பிரச்சனைகளை

முன்னாள் விடுதலைப் புலிகள் சமூகத்தில் மீண்டும் கலப்பதில் தாம் சில பிரச்சனைகளை சந்தித்து வருவதாக இலங்கை அதிகாரிகள் கூறுகின்றனர்.
புனர்வாழ்வு நடவடிக்கைக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட போராளிகள் சிலர் காவல் துறையினரால் விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அதேநேரம் இவ்வாறு திரும்ப கைதுசெய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமானது என்றும் முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அரசு கூறுகிறது.

இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதி கட்டத்தில் 11 ஆயிரம் விடுதலைப் புலிகள் சரணடைந்ததாக இலங்கை இராணுவம் கூறுகிறது. ஆனால் இவர்களின் நிலை குறித்த சர்ச்சை நீடிக்கிறது.

மனித உரிமை அமைப்புகள் கவலை

இந்தப் போராளிகள் வைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு சென்று பார்வையிட சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாக இராணுவம் கூறுகிறது.

கடந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இதுவரை சுமார் 5600 பேர் தொகுதி தொகுதியாக விடுவிக்கப்பட்டுவிட்டதாக புனர்வாழ்வு நடவடிக்கைக்கு பொறுப்பான இராணுவ அதிகாரியான பிரிகேடியர் சுதாந்த ரணசிங்கே பிபிசியின் தெரிவித்தார்.

ஆனால் முன்னாள் போராளிகளின் விடுவிப்பு நிகழ்வுகள் எப்போதும் சுமூகமாக நடந்து முடிவதில்லை என்ற பேச்சும் இருந்து வருகிறது.

விடுவிக்கப்பட்டவர்கள் அடிக்கடி எவ்வித காரணமும் இன்றி விசாரிக்கப்படுவது தொடர்பாக தமக்கு கவலையளிக்கும் செய்திகள் கிடைத்துள்ளதாக பிரஸ்ஸல்ஸைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இன்டர்னேஷனல் கிரைசிஸ் குருப் என்ற சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.

இராணுவம் விளக்கம்

முன்னாள் புலிகள் பலர் காவல் துறையினரால் சில சமயம் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஒத்துக் கொள்ளும் பிரிகேடியர் ரனசிங்கே ஆனால் இவர்களது கடந்தகால செயல்களுக்காக இவர்கள் விசாரிக்கப்படவில்லை என்கிறார்.


திருடுவது, சட்ட விரோதமாக சாரயம் காய்ச்சுவது போன்ற செயல்களில் முன்னாள் புலி போராளிகள் ஈடுபடுவதாக கிராமவாசிகளிடமிருந்து புகார் வந்ததன் அடிப்படையிலேயே அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார் பிரிகேடியர்


பிரிகேடியர்
ஆனால் இது குறித்து மேலதிக விபரங்களை அவரால் தர முடியவில்லை.

இப்படி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அதிக காலம் தடுத்துவைக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

தற்போது அரசு தரும் புனர்வாழ்வுப் பயிற்சியில் மன நலம் சார்ந்த பயிற்சிகளை அளிக்க உளவியல் நிபணர்களும் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

பிபிசி http://www.yarl.com/

No comments:

Post a Comment