அரசாங்கத்துடன் பேசி அனைத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.
டக்ளஸ் தேவானந்தா அண்மையில் மேற்படி கருத்தொன்றை தெரிவித்திருக்கிறார். டக்ளஸ் பேசி பேசி தனக்கென்று எல்லாவத்தையும் பெற்றுக்கொண்டாரா என்றால் சில விடயங்கள் விடுபட்டு போனமாதிரி தெரிகிறது. முக்கியமாக
வீணைச்சின்னத்தில் போட்டியிடுவதற்கான அனுமதியைக் கூட டக்ளசால் பெற முடிந்ததா? இல்லையே! அப்புறம் விணையென்னடா வெத்திலையென்னடா என்று பாட்டைப்போட்டு கேட்கவேண்டிய நிலை ஏன் வந்தது டக்ளஸ் அவர்களே!
அரசுடன் நீங்கள் எதைப்பேசி பெற்றுத்தரப்போகிறீர்கள்?. நல்லதொரு அமைச்சுப்பதவியைக்கூட உங்களால் பெற முடியவில்லையே! அரசாங்கத்தை விமர்சித்து திரிந்த ரவூப் கக்கீம் நீதியமைச்சு பதவியை எடுத்த தந்திரத்தைக் கூட நீங்கள் கற்றுக் கொள்ள முடியவில்லையே!
மக்களுக்கு புலிகள் செய்துவிட்டு போன அநியாயங்கள் ஏராளம். புலிக்கெதிரான யுத்தத்தில் இராணுவம் தமிழ்ப்பகுதிகளில் செய்த கெடுபிடிகளும் தடைகளும் ஏராளம். இவை இப்போது படிப்படியாக குறைந்து தடைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏனென்றால் புலியில்லை. அரசு தனது நாட்டு குடிமக்களுக்கு செய்துதான் ஆக வேண்டும். அது அதன் கடமை. மூடப்பட்ட பாதைகள் திறக்கப்படும் போது ஆகா அரசு இதோ பாதையை திறக்கின்றது என வடமாகண ஆளநருடன் போய் நின்று பக்கத்தில் போஸ் கொடுத்துக்கொண்டு அதனை இணையத்தளங்களில் போட்டு விட்டு ஏதொ ஒரு மிகப்பெரிய சாதனையை செய்த மாதிரி செய்தி வெளிவிடுவது அபத்தமாகப் படவில்லையா?. பாதையை மூடின அரசு அதனை மீண்டும் திறக்கிறது. பாதுகாப்பு வலயங்களை மீளத்திறக்கிறது. மக்களை அங்கு மீளக்குடியேற்றுகிறது. இதனை அரசாங்கம் நீங்கள் சொல்லித்தானா செய்கிறது. நீங்கள் பேசித்தானா செய்கிறது. இல்லையே! இவற்றிற்குப் பின்னால் அரசுக்கு பல தேவைகள் இருக்கிறது அதுதான் உண்மை
அரசு அதனை செய்ய வேண்டும். அது அரசின் கடமை. தடைகளையும் பாதுகாப்பு வலயங்களையும் புலி இல்லையென்றான பின்பு என்ன மண்ணாங்கட்டிக்கு அவற்றை வைத்திருக்க வேண்டும். தமிழ்மக்களின் பிரச்சினைகளை பேசித்தீர்க்கப்பட வேண்டும். அதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால் உங்களது வீணைச்சின்னத்தில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட உங்களுக்கு உரிமையிருக்கிறதா டக்ளஸ்?. இல்லையே!. இணக்க அரசியல் என்பது பேச்சுக்கு நல்லாயிருக்கும். உரிமைகளுக்கு…..? போராடவேண்டும் டக்ளஸ். ஆயதத்தால் அல்ல.
முதலில் அரசுடன் பேசி வீணைச்சின்னத்தில் போட்டியிடும் உரிமையை வென்றெடுக்கப்பாருங்கள். இன்னுமொரு கேள்வி? தமிழ்மக்களுக்கு நீங்கள் செய்கின்ற வேலைகள் அனைத்துக்கும் அமைச்சரான உங்களுக்கு அரசுதானே சம்பளம் தருகிறது. நீங்கள் அரசுக்கு ஒரு வேலைகாரன். வேலை செய்ததான் ஆக வேண்டும். மக்களுக்கு நீங்கள் செலவிடுகின்ற பணம் அனைத்தும் அரசின் பணம்தானே டக்ளஸ் அவர்களே!. உங்கள் சொந்தப்பணத்தில் செய்ய உங்களால் முடியுமா? கொழும்பில் நீர்வாரியத்திற்கு நீங்கள் கட்டவேண்டிய பாக்கி பல லட்சங்கள் இருப்பதாக அண்மையில் பத்திரிகை செய்திகள் வெளியாகியிருந்தன. கட்சி ஊழியர்கள் சம்பளம், பத்திரிகை வானொலி, உங்கள் சொந்த பாதுகாப்பு வீரர்கள் ஊதியம் அது இது என ஏகப்பட்ட செலவுகள் உங்களுக்கு இருக்கின்றன. கட்சிக்கு வருமானம் என்று எதுவும் கிடையாது. வேறு வருமானங்கள் என்றால் அரசு ஆதரவு இன்றி உங்களுக்கு கிடைக்காது. ஆகவே அரசுடன் நீங்கள் பேசி பேசித்தான் உங்களுக்கு எதுவும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் மக்களுக்கு!
இன்று உங்கள் கட்சியில் பணம் இல்லாமல் வேலை செய்ய யார்தான் தயாராக இருக்கிறார்கள். பணம் இல்லையென்றால் டக்ளஸ் கூட ஒரு ஆண்டிதான். கொள்கைகளுக்காக வேலை செய்ய இன்று எவனும் தயாராக இல்லை. அந்தகாலங்கள் முடிந்து போய் கால் நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. இது தெரிந்துதானே நீங்களும் பல ஆண்டுகளாக அரசுடன் சேர்ந்து அமைச்சராக இருக்கிறீர்கள்.
மக்கள் பாவங்கள். வருகிற எல்லாருமே மக்களுக்காக என்றுதான் வாறான். யாருமே மக்களை கவனிப்பதில்லை. மக்களும் தங்களுக்காக அர்பணிப்பு செய்பவனை ஆதரிப்பதுமில்லை. இது இலங்கைத் தேசத்தில் எழுதப்படாத விதி
30வருடங்களாக எல்லாவத்தையும் இழந்து ஏதொ பிழைத்துக்கொண்டு பல மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்குதுகள். நான் மேல்தட்டு நடுத்தர மக்களை சொல்லவில்லை. வறுமைக்குள் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களைச்சொல்கிறேன். புலிகளுக்காக தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்து விட்டு அரச நிவாரணங்களையும் உதவிகளையும் எதிர்பார்த்து வாழுகின்ற மக்கள் இன்னும் நிறையப்பேர் இருக்கிறார்கள். இந்த மக்களை நிவாரணங்களில் மட்டும் வாழ வைக்காமல் அதுகளுக்கென ஒரு வருமானத்தை தருகின்ற வழிமுறைகளையும் தேடிப்போக வேண்டியிருக்கிறது.
இதெல்லாம் அரசுடன் பேசித்தான் ஆகவேண்டுமா? அரசுக்கு இது தெரியாதா?. மக்களின் பிரச்சினைகள் தெரியாமல் மந்திரியாரே மாதம் மும்மாரி பொழிகிறதா என கேட்கும் வாத்து மன்னர்களை கொண்டதா எமது நாடு?
பேசுவோம் பேசிக்கொண்டேயிருப்போம். பிரச்சினைகள் மட்டும் நாளுக்குநாள் அதிகரிக்கிறதே தவிர குறைகிறமாதிரி தெரியவில்லை.
மக்களுக்கு நாங்கள் பேசினோம் பேசிக்கொண்டு இருக்கிறோம் இனியும் பேசுவோம் இப்படியே சொல்லிக்கொண்டேயிருப்போம்.
சரிதானே டக்ளஸ்.
நன்றி! டீவடை இணையம்
படம்: சுழிபுரம் பிரதேச சபைக்குட்பட்ட பல்லசுட்டி காந்திஜீ முன்பள்ளிக்கு புதிய மலசல கூடம் அமைக்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வேண்டியதிற்கு இணங்க… சுழிபுரம் பல்லசுட்டி முன்பள்ளிக்கு புதிய மலசலகூடம் அமைப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒரு இலட்சம் ரூபா காசோலையை வழங்கும் வைபவம் (பட உதவி: ஈ.பீ.டி.பீ. இணையம்)
டக்ளஸ் தேவானந்தா அண்மையில் மேற்படி கருத்தொன்றை தெரிவித்திருக்கிறார். டக்ளஸ் பேசி பேசி தனக்கென்று எல்லாவத்தையும் பெற்றுக்கொண்டாரா என்றால் சில விடயங்கள் விடுபட்டு போனமாதிரி தெரிகிறது. முக்கியமாக வீணைச்சின்னத்தில் போட்டியிடுவதற்கான அனுமதியைக் கூட டக்ளசால் பெற முடிந்ததா? இல்லையே! அப்புறம் விணையென்னடா வெத்திலையென்னடா என்று பாட்டைப்போட்டு கேட்கவேண்டிய நிலை ஏன் வந்தது டக்ளஸ் அவர்களே!
அரசுடன் நீங்கள் எதைப்பேசி பெற்றுத்தரப்போகிறீர்கள்?. நல்லதொரு அமைச்சுப்பதவியைக்கூட உங்களால் பெற முடியவில்லையே! அரசாங்கத்தை விமர்சித்து திரிந்த ரவூப் கக்கீம் நீதியமைச்சு பதவியை எடுத்த தந்திரத்தைக் கூட நீங்கள் கற்றுக் கொள்ள முடியவில்லையே!
மக்களுக்கு புலிகள் செய்துவிட்டு போன அநியாயங்கள் ஏராளம். புலிக்கெதிரான யுத்தத்தில் இராணுவம் தமிழ்ப்பகுதிகளில் செய்த கெடுபிடிகளும் தடைகளும் ஏராளம். இவை இப்போது படிப்படியாக குறைந்து தடைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏனென்றால் புலியில்லை. அரசு தனது நாட்டு குடிமக்களுக்கு செய்துதான் ஆக வேண்டும். அது அதன் கடமை. மூடப்பட்ட பாதைகள் திறக்கப்படும் போது ஆகா அரசு இதோ பாதையை திறக்கின்றது என வடமாகண ஆளநருடன் போய் நின்று பக்கத்தில் போஸ் கொடுத்துக்கொண்டு அதனை இணையத்தளங்களில் போட்டு விட்டு ஏதொ ஒரு மிகப்பெரிய சாதனையை செய்த மாதிரி செய்தி வெளிவிடுவது அபத்தமாகப் படவில்லையா?. பாதையை மூடின அரசு அதனை மீண்டும் திறக்கிறது. பாதுகாப்பு வலயங்களை மீளத்திறக்கிறது. மக்களை அங்கு மீளக்குடியேற்றுகிறது. இதனை அரசாங்கம் நீங்கள் சொல்லித்தானா செய்கிறது. நீங்கள் பேசித்தானா செய்கிறது. இல்லையே! இவற்றிற்குப் பின்னால் அரசுக்கு பல தேவைகள் இருக்கிறது அதுதான் உண்மை
அரசு அதனை செய்ய வேண்டும். அது அரசின் கடமை. தடைகளையும் பாதுகாப்பு வலயங்களையும் புலி இல்லையென்றான பின்பு என்ன மண்ணாங்கட்டிக்கு அவற்றை வைத்திருக்க வேண்டும். தமிழ்மக்களின் பிரச்சினைகளை பேசித்தீர்க்கப்பட வேண்டும். அதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால் உங்களது வீணைச்சின்னத்தில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட உங்களுக்கு உரிமையிருக்கிறதா டக்ளஸ்?. இல்லையே!. இணக்க அரசியல் என்பது பேச்சுக்கு நல்லாயிருக்கும். உரிமைகளுக்கு…..? போராடவேண்டும் டக்ளஸ். ஆயதத்தால் அல்ல.
முதலில் அரசுடன் பேசி வீணைச்சின்னத்தில் போட்டியிடும் உரிமையை வென்றெடுக்கப்பாருங்கள். இன்னுமொரு கேள்வி? தமிழ்மக்களுக்கு நீங்கள் செய்கின்ற வேலைகள் அனைத்துக்கும் அமைச்சரான உங்களுக்கு அரசுதானே சம்பளம் தருகிறது. நீங்கள் அரசுக்கு ஒரு வேலைகாரன். வேலை செய்ததான் ஆக வேண்டும். மக்களுக்கு நீங்கள் செலவிடுகின்ற பணம் அனைத்தும் அரசின் பணம்தானே டக்ளஸ் அவர்களே!. உங்கள் சொந்தப்பணத்தில் செய்ய உங்களால் முடியுமா? கொழும்பில் நீர்வாரியத்திற்கு நீங்கள் கட்டவேண்டிய பாக்கி பல லட்சங்கள் இருப்பதாக அண்மையில் பத்திரிகை செய்திகள் வெளியாகியிருந்தன. கட்சி ஊழியர்கள் சம்பளம், பத்திரிகை வானொலி, உங்கள் சொந்த பாதுகாப்பு வீரர்கள் ஊதியம் அது இது என ஏகப்பட்ட செலவுகள் உங்களுக்கு இருக்கின்றன. கட்சிக்கு வருமானம் என்று எதுவும் கிடையாது. வேறு வருமானங்கள் என்றால் அரசு ஆதரவு இன்றி உங்களுக்கு கிடைக்காது. ஆகவே அரசுடன் நீங்கள் பேசி பேசித்தான் உங்களுக்கு எதுவும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் மக்களுக்கு!
மக்கள் பாவங்கள். வருகிற எல்லாருமே மக்களுக்காக என்றுதான் வாறான். யாருமே மக்களை கவனிப்பதில்லை. மக்களும் தங்களுக்காக அர்பணிப்பு செய்பவனை ஆதரிப்பதுமில்லை. இது இலங்கைத் தேசத்தில் எழுதப்படாத விதி
30வருடங்களாக எல்லாவத்தையும் இழந்து ஏதொ பிழைத்துக்கொண்டு பல மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்குதுகள். நான் மேல்தட்டு நடுத்தர மக்களை சொல்லவில்லை. வறுமைக்குள் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களைச்சொல்கிறேன். புலிகளுக்காக தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்து விட்டு அரச நிவாரணங்களையும் உதவிகளையும் எதிர்பார்த்து வாழுகின்ற மக்கள் இன்னும் நிறையப்பேர் இருக்கிறார்கள். இந்த மக்களை நிவாரணங்களில் மட்டும் வாழ வைக்காமல் அதுகளுக்கென ஒரு வருமானத்தை தருகின்ற வழிமுறைகளையும் தேடிப்போக வேண்டியிருக்கிறது.
இதெல்லாம் அரசுடன் பேசித்தான் ஆகவேண்டுமா? அரசுக்கு இது தெரியாதா?. மக்களின் பிரச்சினைகள் தெரியாமல் மந்திரியாரே மாதம் மும்மாரி பொழிகிறதா என கேட்கும் வாத்து மன்னர்களை கொண்டதா எமது நாடு?
பேசுவோம் பேசிக்கொண்டேயிருப்போம். பிரச்சினைகள் மட்டும் நாளுக்குநாள் அதிகரிக்கிறதே தவிர குறைகிறமாதிரி தெரியவில்லை.
மக்களுக்கு நாங்கள் பேசினோம் பேசிக்கொண்டு இருக்கிறோம் இனியும் பேசுவோம் இப்படியே சொல்லிக்கொண்டேயிருப்போம்.
சரிதானே டக்ளஸ்.
நன்றி! டீவடை இணையம்
படம்: சுழிபுரம் பிரதேச சபைக்குட்பட்ட பல்லசுட்டி காந்திஜீ முன்பள்ளிக்கு புதிய மலசல கூடம் அமைக்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வேண்டியதிற்கு இணங்க… சுழிபுரம் பல்லசுட்டி முன்பள்ளிக்கு புதிய மலசலகூடம் அமைப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒரு இலட்சம் ரூபா காசோலையை வழங்கும் வைபவம் (பட உதவி: ஈ.பீ.டி.பீ. இணையம்)
No comments:
Post a Comment