Thursday, January 27, 2011

மகிந்தாவை கைது செய்யும் முறைப்பாடுகளை அமெரிக்க நீதியாணையாளருக்கு நேரிடையாக அனுப்புங்கள்

சிறீலங்கா அரச தலைவரை கைது செய்யக்கோரும் மனுக்களை அமெரிக்க நீதி ஆணையாளரிடம் நேரிடையாக மின்னஞ்சல் மூலம் தெரிவிக்குமாறு தமிழ் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தமது முறைப்பாடுகளை அமெரிக்காவின் நீதியாளர் நாயகம் எரிக் எச் கொல்டர் (Eric H. Holder) இன் பிரத்தியோக பெயரை குறித்து பின்வரும் மின்னஞ்சல் மூலம் அனுப்பமுடியும்.
மின்னஞ்சல் முகவரி வருமாறு: AskDOJ@usdoj.govஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
உலகில் எந்த பாகத்தில் வாழ்பவராக இருந்தாலும், இதனை மேற்கொள்ளமுடியும் என அமெரிக்க தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் உதவிகள் தேவைப்படுபவர்கள் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்களை தொடர்புகொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.

No comments:

Post a Comment