சிறிலங்காவில் ‘லங்கா ஈ நியூஸ்‘ இணையத்தளத்தின் பணியகம் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் தீட்டு எரிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2 மணியளவில மாலபே, தம் மாவத்தையில் உள்ள இந்த இணையத்தளத்தின் பணியகக் கட்ட்டத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத சிலர் அதற்குத் தீயிட்டு எரித்தனர்.
இதனால் அங்கிருந்த ஆவணங்கள், கணினிகள் மற்றும கருவிகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக லங்கா ஈ நியூஸ் அறிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு சற்று முன்னதாக லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் பெனெற் ரூபசிங்கவை தொலைபேசியில் அழைத்த ஒருவர், அவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
சிறிலங்கா அரசின் ஊழல்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ச்சியான செய்திகளை வெளியிட்டு வரும் இந்த இணையத்தளத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஒரு ஆண்டுக்கு முன்னர் கடத்தப்பட்டு காணாமற் போனார்.
இதன் பின்னர் இந்த இணையத்தளத்தின் ஆசிரியர் சந்துருவன் சேனாதீரவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை அடுத்து அவர் நாட்டை விட்டுத் தப்பி ஓடினார்.
தொடர்ச்சியாக அரசாங்கத் தரப்பில் இருந்து விடுக்கப்பட்டு வந்த அச்சுறுத்தல்களை அடுத்து ராஜகிரியவில் இருந்த பணியகத்தை மாலபேக்கு மாற்றியது லங்கா ஈ நியூஸ். அந்தப் பணியகமே தற்போது தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. |
No comments:
Post a Comment