Sunday, January 30, 2011

“ஈழத்தில் இனக்கொலை – இதயத்தில் இரத்தம்” வைகோ அவர்கள் இயக்கிய ஆவணப்படம்

மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் தொடக்க காலம் தொட்டே ஈழ விடுதலைக்காகவும் அம்மக்களின் துயரம் குறித்தும் பொதுக்கூட்டங்களிலும், கட்டுரைகள், நூல்கள் வாயிலாகவும் குரல் கொடுத்து வருகிறார்.

தாய்த் தமிழகத்தில் எண்ணற்ற முறையில் எல்லா வழிகளிலும் போராட்டங்கள் நடத்திச் சிறைப்பட்டும் இருக்கிறார்.உலக நாடுகள் பலவற்றில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும்,ஐ.நா மன்றம்,மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றில் வாதிட்டும் தன்னுடைய கருத்துக்களை ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கிறார்.
தற்போது “ஈழத்தில் இனக்கொலை – இதயத்தில் இரத்தம்” என்கிற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றினைத் தயாரித்தும் இயக்கியும் வெளியிட்டுள்ளார்.இதில் தொடக்கம் முதல் ஈழத்தின் வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் அவர் முள்ளிவாய்க்கால் துயரங்களையும் தமிழர்கள் படும் துன்பங்களையும் காணொளி வடிவில் ஆவணப்படுத்தியிருக்கிறார்.

ஈழம் என்பது தமிழர்களின் தாயகம் என்பதனையும், சிங்களவர்களே அம்மண்ணில் வந்தேறிகள் என்பதனையும் தெளிவாக எடுத்துரைக்கிறார். ஒவ்வொரு தமிழரும், மனிதநேய உணர்வாளரும் காண வேண்டிய ஆவணம். இதைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் பரப்பவேண்டியது கடமையாகும்.



No comments:

Post a Comment