
கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த நா.க.த.அ. உள்ளக அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்தபொழுது மேற்கண்டவாறு திரு சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய சூழ்நிலையில் முள்ளிவாய்க்காலின் பின்பு தமிழ்மக்களை ஒன்று சேர்த்து தமிழீழம் ஒன்றை அமைப்பதில் நா.க. அரசாங்கம் முன்னின்று உழைப்பதால் நாம் தமிழர் கட்சியும் நாடு கடந்த த.அ. ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
உலகிலுள்ள சகல தமிழ் அமைப்புகள் எல்லாம் நா.க. தமிழீழ அரசுடன் பதிவு செய்து இணைந்து செயல்படுமாறு நாகலிங்கம் பாலச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment