Saturday, January 08, 2011

ஐ.நா. நிபுணர் குழு இங்கு விசாரணைக்கு வருமானால் விஸா வழங்கப்பட மாட்டாது- கெஹலிய

hegeliya_rampuhala11ஐ.நா. நிபுணர்கள் குழு நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்க இலங்கை வருவதாகவிருந்தால்  மாத்திரமே அக்குழுவுக்கு விஸா வழங்கப்படும். விசாரணை நடத்த வருவதாகவிருந்தால் விஸா வழங்கப்படமாட்டாது என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலியரம்புக்வெல நேற்றுக் கூறினார்.

அரச தகவல் திணைக்களத் தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப் பில்  கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் இதுதொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:ஐ.நா. நிபுணர் குழு தொடர்பான எமது  நிலைப்பாட்டில் எதுவித மாற்றமுமில்லை.அக்குழு எமது நாடு தொடர்பாக விசாரணை நடத்த நாம் அனு மதிக்கமாட்டோம் என்று ஏற்கனவே கூறியிருந்தோம். அதே நிலைப்பாட்டில்தான் நாம் தொடர்ந்தும் இருக்கின்றோம். அந்த நிலைப்பாட்டில் எதுவித மாற்றமுமில்லை.ஐ.நா. நிபுணர்கள் குழு தொடர்பான எமது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. எமது
நிலைப் பாட்டில் எதுவித மாற்றமும் இல்லை என்பதை நாம் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றோம்.
ஐ.நா. நிபுணர்கள் குழு எமது நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க வருவதாகவிருந்தால் மாத்திரமே அக்குழுவுக்கு விஸா வழங்கப்படும். விசாரணை நடத்த வருவதாகவிருந்தால் விஸா வழங்கப்படமாட்டாது.எமது நிலைப்பாடு தொடர்பாகப் பிழையாக விளங்கியிருப்பவர்கள் இதை நன்கு புரிந்துகொள்ளவேண்டும்  என்றார்.

No comments:

Post a Comment