தடுப்புக்காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் முன்னாள் போராளிகளின் விபரங்களை வெளியிட சிறிலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே சிறிலங்கா அரசாங்கத் தரப்பு இந்த இணக்கத்தை வெளியிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக இந்தப் பட்டியல் வவுனியாவில் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் பின்னர் இந்த விபரங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பார்வையிடுவதற்கு ஒழுங்குகள் செய்யப்படும் என்றும் அரசாங்கத் தரப்பு உறுதி அளித்துள்ளது.
போரின் இறுதிக் கட்டத்தில சுமார் 11 இற்கும் அதிகமாக முன்னாள் போராளிகள் சிறிலங்காப் படைகளிடம் சரணடைந்தனர்.
அத்துடன் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகளும் சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒரு தொகுதி முன்னாள் போராளிகள் மட்டுமே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தடுப்புக்காவலில் உள்ளவர்களின் விபரங்களை வெளியிடப் போவதாக சிறிலங்கா அரசு முன்னரும் அறிவித்திருந்தது.
ஆனால் இதுவரை அந்தப் பட்டியல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |
No comments:
Post a Comment