விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியாது என்ற கருத்தை பொய்ப்பிப்பதற்காக அரசாங்கம் ஏராளம் பொதுமக்களின் உயிர்களைப் பலிகொடுத்திருப்பதாக இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நோ்காணலிலேயே அவர்
மேற்கண்ட கருத்தைத் தெரிவித்துள்ளார். அதன் போது அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களின் சாரம் கீழ்வருமாறு அமைந்திருந்தது.
விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் வெற்றிக்கு அரசாங்கம் பெரிய விலையைச் செலுத்தியிருந்தது. அதற்காக ஏராளம் பொதுமக்களின் உயிர்கள் பலிகொடுக்கப்பட்டன. அதன் மூலமாகவே அரசாங்கம் அந்த யுத்தத்தில் வெற்றி பெற முடிந்தது.
ஆயினும் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான தண்டனை வழங்கி இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்தலே தற்போதை அத்தியாவசிய தேவையாகும். பொதுமக்களின் உயிர்கள் பலியாதவற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். வடக்கில் தோ்தல் நடாத்தப்பட்டு நிர்வாகம் மக்கள் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
பொதுமக்கள் யுத்தத்தில் பலியானதற்கு விடுதலைப்புலிகளே பெருமளவில் பொறுப்புக் கூற வேண்டும். பொதுமக்களின் நிலைகளிலிருந்து அவர்கள் இராணுவத்தினர் மீது தாக்குதலை மேற்கொண்டதன் காரணமாகவே அவ்வாறான இழப்பு ஏற்பட்டது.
பொதுமக்களின் இழப்புகளை வைத்து யுத்தத்தை நிறுத்துவதற்கு சர்வதேச சமூகத்தினரின் தலையீட்டைப் பெற புலிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆயினும் அது கைகூடவில்லை. அந்த வகையில் யுத்த வலயத்திலிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றத் தவறியதன் மூலம் விடுதலைப்புலிகள் சர்வதேச சட்டங்களை மீறியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment