Saturday, February 05, 2011

கப்பல் சேவை மார்ச்சில்

சுமார் 30 வருடங்களின் பின்னர், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான படகு சேவைகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதற்கான இந்தியாவின் தயார் நிலைகள் குறித்து ஆராய்வதற்காக, இலங்கையின் கப்பற்துறை குழு ஒன்று அடுத்தவாரம் இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஏற்கனவே இந்த கப்பல் சேவை இந்த மாதம் ஆரம்பிக்கப்படவிருந்தது.
எனினும் இறுதி நேரத்தில் ஏற்பட்ட சில சட்ட நடைமுறைகளைத் தொடர்ந்து, இந்த பணிகள் மார்ச் மாதம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்புக்கும், தூத்துக்குடிக்கும் இடையில் இந்த சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கிடையில் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள கப்பல் சேவையை அடுத்து, இந்தியாவுக்கு வானூர்தியில் செல்லும் செலவினைக் காட்டிலும் குறைந்த செலவில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்த கப்பல் சேவையின் மூலம் இந்திய இலங்கை சுற்றுப் பயணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
குறைந்த பட்சம் ஆறு கப்பல்கள் சேவைகள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், ஒரு தடவையில் 300 தொடக்கம், 500 வரையிலான பிரயாணிகள் ஏற்றுக் கொள்ளப்படுவர்.
கப்பலின் ஊடாக இலங்கையில் இருந்து இந்தியா செல்ல சுமார் எட்டு மணித்தியாலங்கள் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment