Saturday, February 05, 2011

சென்னையில் நடைபெற்ற நாடுகடந்த தமிழிழ அரசின் கருத்தரங்கில் பிரதமரின் உரை!

நாடு கடந்த தமிழீழ அரசின் ஒரு அங்கமாக, நாடு கடந்த தமிழீழஅரசு தோழமை  மையம்  தமிழ்  நாட்டில்  உருவாக்கப்பட்டு,அதன் முதல் கருத்தரங்கம், நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? என்ற  தலைப்பில்    இன்று  சென்னையில் நடைபெற்றது.பேராசிரியர் சரசுவதி அவர்கள் தலைமை தாங்கினார்.முதலில் ஈழத்தில் உயிர் நீத்த தமிழர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


பிறகு  அறிமுக உரையை தோழர் தியாகு நிகழ்த்தினார். கருத்துரை  கொளத்தூர்  மணி  பெரியார்  திராவிட கழகம்,   மணிவண்ணன்  இயக்குனர்  எஸ். எம். பாக்கர், சி. ராஜன், அய்யநாதன், மருத்துவர் எழிலன்,மற்றும் மணி அவர்கள் உரையாற்றினர்.

தமிழீழ விடுதலைக்கான  ஆயுத  போராட்டம்  பின்னடைவை சந்தித்துள்ள சூழலில் தமிழீழ சிக்கல்  சர்வதேச  அரசியல்  தளத்திற்கு  நகர்ந்துள்ளது. இதை அரசியல் ரீதியாக  முன்னெடுத்து  செல்ல  அதற்கான  கருத்துவாக்க  சக்தியாக  செயல்படுவதே நாடு கடந்த தமிழீழ அரசின் முதன்மையான  குறிக்கோள்     என்பதனை உரையாற்றியவர்கள் எடுத்துரைத்தனர்.முக்கிய நிகழ்வாக நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதம  அமைச்சர்   திரு ருத்ரகுமாரன் அவர்களின் உரை ஒளித்திரையில்  ஒளிப்பரப்பட்டது.

நாடு கடந்த தமிழீழ அரசின் செயல் பாடுகள் மற்றும் அதன் கொள்கைகள், நோக்கங்கள்,  அதன் நம்பகத்தன்மை ஆகியவைகளை பற்றி மக்களுக்கு விளக்கி கூற இது போன்ற கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கூறினர். நூற்றுக்கணக்கானோர்  இதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.









No comments:

Post a Comment