வவுனியா நகரிலும் சுற்றுப் புறத்திலும் சிங்கள இராணுவத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவர அரச அதிகாரிகளும் இராணுவ உயர் மட்டத்தினரும் கடும் பிரயத்தனம் எடுக்கின்றனர். தயார் நிலையில் இருந்தாலும் வன்முறையில் இறங்க இராணுவம் தயக்கம் காட்டுகிறது.உலகின் பார்வை இலங்கை பக்கம் திரும்பியுள்ளதால் ஏதேனும் ஏடாகூடமாக நடந்து விடக் கூடாது என்பதில் இராணுவத் தலைமை மிகவும் ஜாக்கிரதையாகச் செயற்படுகிறது. ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் காட்டபட்ட காணொளியின் தாக்கம் இராணுவத்தின் நடவடிக்கையில் தெரிகிறது.
வவுனியாக் கிளர்ச்சிக்கு என்ன காரணம் என்றால் அதற்கு இராணுவம் தான் பொறுப்புக் கூறவேண்டும். வழங்கிய வாக்குறுதியைக் காப்பாற்றாமல் ஏமாற்றும் இராணுவத்தை மக்கள் இனிமேலும் பொறுத்துக் கொள்ளத் தயாரில்லை என்பதை வெளிப்படையாகத் தெரிவித்தனர்.
தடுப்புக் காவலில் இருக்கும் அப்பாவிச் சந்தேக நபர்களில் 1000 வரையிலானோரை விடுவிப்பதாக இராணுவம் வாக்குறுதி அளித்தது. இதை எதிர்பார்த்த உற்றார் உறவினர்களும் பிறரும் அதிகாலை தொடக்கம் இராணுவ நிலைகளுக்கு அருகாமையில் குழுமி நின்றனர். பலர் தெருவோரங்களிலும் நின்றனர்.
குழந்தை குட்டிகளோடு ஆவலோடு காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம் காத்திருந்தது. நீண்ட இழுபறிக்குப் பிறகு 337 அப்பாவிகள் மாத்திரம் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மிகுதிப் பேர் எங்கே என்ற பலமான குரல் எழுந்தது. பதில் கூற முடியாத இராணவத்தினர் திக்கு முக்காடிப் போயினர். கிளிப் பிள்ளை போல் மிக விரைவில் விடுவிப்போம் என்று மீண்டும் மீண்டும் சொன்னார்கள். இனிமேலும் நம்புவதற்கு தயாரில்லாத மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
கொழுத்தும் கோடை வெய்யிலைப் பொருட்படுத்தாது சாலை மறியல் போராட்டத்தைத் தொடங்கினர். இராணுவ வாகனங்கள் உட்பட அனைத்துப் போக்கு வரத்தும் வவுனியாத் தெருக்களில் நின்று விட்டன. இளம் படையினர் வன்முறையில் இறங்கத் துடித்தாலும் மூத்த அதிகாரிகள் அவதானமாக இருக்கின்றனர்.
அமைதி வளியில் கிளர்ச்சி அடக்குவதில் பயிற்சி பெற்ற ஒரு இராணுவ அதிகாரி மக்களைச் சமாதானப்படுத்த எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. அவர் கொடுத்த வாக்குறுதிகளைப் போல் பலவற்றைக் கேட்டு மக்கள் சலிப்படைந்துள்ளனர். இராணுவம் தனது நம்பகத்தன்மையை இழந்து பல வருடங்களாகின்றன.
மக்கள் அமைதியாகக் கலைந்து சென்று விட்டதாக அரச சார்பு ஊடகங்கள் கூறுவதில் உண்மையில்லை நிலமை மோசமடையலாம் என்பது தா
No comments:
Post a Comment