Tuesday, June 07, 2011

யேர்மனியில் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி.

யேர்மனி டோட்முண்ட் நகரில் இன்று 5.6.2011 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில் உள்ள தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது. தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமான இன் நிகழ்வில் யேர்மனியிலுள்ள பல தமிழாலயங்கள் பங்குபற்றின.
பத்துவயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் முதலாவது இடத்தை Duisberg  தமிழாலயம் பெற்றுக்கொண்டது. அடுத்து பதின்மூன்று வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் முதலாவது இடத்தை Essen தமிழாலயமும் இரண்டாவது இடத்தை Meerbusch தமிழாலயமும் பெற்றுக்கொண்டன.


தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் பதினாறு வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் முதலாவது இடத்தை Meerbusch தமிழாலயமும் இரண்டாவது இடத்தை Duisburg தமிழாலயமும் மூன்றாவது இடத்தை  Krefeld தமிழாலயமும் பெற்றுக் கொண்டன.

இதனைத் தொடர்ந்து பதினாறுவயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் முதலாவது இடத்தை Essen தமிழாலயமும்
இரண்டாவது இடத்தை Meerbusch தமிழாலயமும் பெற்றன.

இறுதியாக பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் முதலாவது இடத்தை Essen தமிழாலயமும்
பத்தொன்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் முதலாவது இடத்தை Krefeld தமிழாலயமும், இரண்டாவது இடத்தை Essen தமிழாலயமும்,மூன்றாவது இடத்தை Kerpen தமிழாலயமும் பெற்றுக் கொண்டன.
இறுதியாக தேசியக் கொடி இறக்கிவைக்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் இனிதே முடிவுற்றது

No comments:

Post a Comment