Saturday, June 25, 2011

தகவல் போரில் இலங்கை தோற்றுவிட்டது! ஒப்புக்கொள்கிறார் றொகான் குணரட்ன

E-mail அச்சிடுக PDF

விடுதலைப் புலிகளுக்கு எதிரான தரைப் போரில் வெற்றி பெற்ற போதும், தகவல் பரப்பில் தோல்வியடைந்து விட்டதாக பேராசிரியர் றொகான் குணரட்ண தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழொன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போர்களின் வெற்றி தனியே போர்க்களத்தின் வெற்றிகளை மட்டும் கொண்டதல்ல.  தரைப்போரில் வெற்றி பெற்ற போதும் தகவல் பரப்பில் அது வெற்றியை இழந்து விட்டது.

விடுதலைப் புலிகளின் நேரடியானதும் முறைமுகமானதுமான பரப்புரைகளை முறியடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் இலங்கை அரசியல் தலைமைகளுக்கு இன்னமும் தெளிவாக விளங்கவில்லை

வெளிவிவகார அமைச்சும், வெளிநாடுகளில் உள்ள அதன் தூதரகங்களும், தகவல் அமைச்சும் இந்தச் சவாலை முறியடிப்பதற்கு தவறி விட்டன.

அரசாங்கம் வலுவான தகவல் நடவடிக்கை ஆற்றலைக் கட்டியெழுப்பும் வரை தவறான தகவல்களின் ஊடான விடுதலைப் புலிகளின் பரப்புரைகள் இலங்கையின் நற்பெயரையும் புகழையும் கெடுக்கவே செய்யும்.

அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைக் கண்டு அரசாங்கம் மனம் தளர்ந்து விடக் கூடாது.  இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் விடுவதன் மூலம் இலங்கை பொறியில் சிக்கி விடக்கூடாது.

ஒவ்வொரு சிறிய குற்றச்சாட்டுகளுக்கும் இலங்கை பதிலளிக்க வேண்டும் என்று றொகான் குணரட்ண  மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment