Monday, June 27, 2011

வடக்கில் 50 வீதமானோர் வறுமையில் வாடுகின்றனரப்ஐ.நா. அறிக்கையில் தெரிவிப்பு

வடக்கில் 50 வீதமானோர் வறுமையில் வாடுகின்றனரப்ஐ.நா. அறிக்கையில் தெரிவிப்புவடக்கிலுள்ள தமிழ் மக்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழேயே வாழ்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 31 ஆம் திகதி வரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் மீளக்குடியமர்ந்த மக்களில் 50 சத வீதத்தினர் வறுமைக்கோட்டுக்குக் கீழேயே வாழ்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவான மீட்சியுடன் இணைந்த மனிதாபிமான அறிக் கையிலேயே ஐ.நா. இதனைத்  தெரிவித்துள்ளது. இன்னும் மீளக் குடியமர்த்தப்படாது இருக்கும் மக்களில் 46 வீதமானோரும் வறுமைக்கோட்டுக்குக் கீழேயே உள்ளதாக அறிக்கை கூறுகின்றது.

"கிளிநொச்சியில் நிலைமை மோசம். 57 சதவீதமானோர் இங்கு வறுமைக்கோட்டுக்குக் கீழேயே வாழ்கின்றனர். அவர்களிலும் 12 வீதத்தினர் மோசமான வறுமையில் வாடுகின்றனர்.'' என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவு மிகஅதிகமாக இருப்பதால் வடக்கில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு போதிய உணவு கிடைப்பதே கடினமானதாக உள்ளது என்பததையும் அறிக்கை குறிப்பிடுகிறது.
"வன்னியில் மீளக்குடியமர்ந்த மக்களில் 77 சதவீதமானவர்கள் இன்னமும்   போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்ட போதும்   தற்காலிகக் கொட்டில்களிலேயே தங்கி இருக்கின்றனர்; இது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அவர்களுக்கான சுகாதார வசதிகளும் மோசமாக உள்ளன. இந்த மாதிரியான வறுமை மற்றும் சரியான வசதியற்ற வாழ்க்கை காரணமாக குடிபோதைக்கு அடிமையாதல் சிறுவர் துஷ்பிரயோகம், சிறுமிகள் கர்ப்பங்கள் என்பன அதிகரிக்கின்றன'' என்றும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment