தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் சிறுவர்களை போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை போன்ற விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை காரணம் காட்டி வன்னியின் இறுதிக்கட்டப் போரின்போது படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட மானிடத்திற்கு எதிரான போர்க்குற்றங்களை நியாயப்படுத்திவிட முடியாது என ரொரன்ரோ ஸ்டார் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற கொடூரமான போர் முடிவடைந்து இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இப்போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கான காத்திரமான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும் என கனடாவில் இருந்து வெளியாகும் பிரபல்யமான நாளிதழான ரொரன்ரோ ஸ்டார் எனும் ஊடகத்தில் ஆய்வாளரும், பேராசியருமான ஜெகதீசன் சாமி வலியுறுத்தியுள்ளார்.விடுதலைப் புலிகள் தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்டனர், சிறுவர்களைப் படையணிகளில் சேர்த்துக்கொண்டனர் என குறை கூறும் சர்வதேசம் அங்கே நடந்த இன அழிப்பைப் பற்றியும் கவனம் எடுக்கவேண்டும் என்று அப்பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது. இதனை ஒரு காரணமாகக் காட்டி இலங்கை அரசு தன்னைப் பாதுகாத்துவருகிறது. இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமாக சர்வதேச விசாரணைகளின் அவசியம் குறித்தும் சர்வதேச சமூகத்திற்கு இந்த ஆவணப்படம் வலியுறுத்தியுள்ளது. இத்தகைய சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியிருக்கிறார்.
ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையோ அல்லது மனிதவுரிமைகள் ஆணைக்குழுவோ இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும் என ரொரன்டோ ஸ்ரார் என்னும் ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment