இலங்கைத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் நியாயமானவையே என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று தெரிவித்துள்ளார். இலங்கையில் நடப்பவை உள்ளூர் பரிமாணம் எனவும் அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தை இந்தியா அறிவுறுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பொன்றிலேயே இன்று இந்திய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இவ்விடயம் குறித்து தான் கலந்துரையாடியதாகவும் ஜெயலலிதா சிறந்த ஒத்துழைப்புடனும் இப்பிரச்சினையின் சிக்கல்தன்மையை உணர்ந்திருப்பதாகவும் மன்மோகன் சிங்க தெரிவித்துள்ளார்
பங்களாதேஷுடனான நல்லறவு குறித்து தெரிவித்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இந்திய எதிர்ப்பு கிளர்ச்சிகளை அடக்குவதற்கு அரசாங்கம் உதவியதாக தெரிவித்ததுடன் பங்களாதேஷுக்கு விஜயம் செய்ய தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அடுத்தவாரம் பங்களாதேஷுக்கு விஜயம் செய்து முக்கிய இருதரப்பு விவகாரங்கள்குறித்தும் கலந்துரையாடவுள்ளதாகவும் இந்திய பிரதமர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment