இலங்கை அரசாங்கம், குற்றச்செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில் இந்த வருட இறுதிக்குள் ஏதேனும் முன்னேற்றத்தை காண வேண்டுமென தெற்காசிய நாடுகளுக்கான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பேரட் தெரிவித்துள்ளார். பொறுப்புக் கூறும் நடவடிக்கையை மேற்கொண்டு, வெளிப்படையானதும், நேர்மையானதுமான உறவுகளைப் பிரித்தானியாவுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையும், ஆவணப்படத்தை ஆராய்ந்த நிபுணர்களும் போரின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்துள்ளது குறித்து பிரித்தானியா ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாகவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரமான, விரிவான, நம்பகமான விசாரணைகளின் மூலம் மட்டுமே உண்மையான நல்லிணக்கத்தை கொண்டு வரமுடியும். குற்றச்சாட்டுக்களை இலங்கை எதிர்கொள்வதன் மூலம் ஒரு நேர்மையான முடிவுக்கு வரமுடியும் என்றார்.
இந்த வருடம் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அனைத்துலக தரத்தில் இருப்பதுடன் அதன் தீர்மானங்கள் அதிகபட்ச நம்பகத் தன்மையைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்றும் பேர்ட் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment