இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்து இலங்கை தனது நிலைப்பாட்டினை விரைவில் வெளியிட வேண்டும் என அமெரிக்கா நிர்ப்பந்தித்துள்ளது. இலங்கை அரசு தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்த தவறும்பட்சத்தில் சர்வதேச நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இலங்கை அரசு அதன் கடப்பாட்டை நிறைவேற்ற தாம் தொடர்ந்தும் வலியுறுத்துவோம் என அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிகாரிகள் பொறுப்பை உறுதி செய்வதில் முதன்மை பொறுப்பை கொண்டிருந்தமையினால், அமெரிக்க சர்வதேச விசாரணைக்காக அழைப்பினை சிறிதுகாலம் நிறுத்தி வைத்திருந்தது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசு இதனை தாமாகவே முன்னெடுக்கும் என தாம் நம்புவதாகவும், ஆனால் முன்னெடுக்க தவறும் பட்சத்தில் அழுத்தங்கள் அதிகரித்து சர்வதேச சமூகம் வேறு ஏதேனும் வழிகளில் ஆராய நேரிடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 இன் காணொளிக்காட்சி வெளியாகியதிலிருந்து இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment