பிரான்சில் அகதி தஞ்சம்கோரும் தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவாகார அமைச்சகம், இந்த கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. பிரபல வழங்கறிஞர்களான Marc Lecacheux - Sandrine Dupuy இருவரும் பங்கெடுத்து கருத்துரைகளையும் - ஆலோசனைகளையும் வழங்கினர்.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அகதிகள் விவாகாரம் தொடர்பிலான கருத்துரைகள் முன்வைக்கப்பட்டன. 2009 மே மாதத்துக்கு பின்னர், இலங்கையில் யுத்தம் ஒய்ந்துவிட்டது என்ற விடயம், அரசியல் அரங்குகளில் மட்டுமல்ல அகதிகள் விவகாரத்திலும் பேசப்பட்டும், கருதப்பட்டும் வருகின்றதென கருத்துரைத்த வழக்கறிஞர் Marc Lecacheux அவர்கள், இலங்கைத் தமிழர்கள் அகதி விண்ணப்பம் கோரலாம் என்ற விடயம் இன்னமும் பிரான்சில் நடைமுறையில் உள்ள நிலையில் சாதகமான வாய்ப்புகள் நிறையவே உள்ளதென நம்பிக்கை தெரிவித்தார்.

2006ம் ஆண்டு முதல் 2009 மே வரை, இலங்கையில் போர் உக்கிரமடைந்து வந்துள்ள காலப்பகுதி என்ற அடிப்படையில், பிரெஞ்சு அரசின் நிலைப்பாட்டுக்கு அமைய, பிரான்சில் தமிழர்களின் அகதி அந்தஸ்து சாதகமாகவே இருந்ததாகவும், அதனால் பலருக்கு தற்காலிக அகதி வதிவிட அனுமதிக்கு வாய்ப்பினை அது வழங்கியுள்ளதென வழங்கறிஞர் Sandrine Dupuy அவர்கள் எடுத்துரைத்தார்.

தற்கால நடைமுறையில் இலங்கையின் பொதுவான நிலைவரங்களுக்கு அப்பால், ஒருவர் தனக்கு உயிர்வாழ்வதற்கு அச்சுறுத்தல் நாட்டில் உள்ளதென்பதை, தகுந்தபடி உறுதிப்படுத்தப்படும் பட்சத்திலேயே, அகதி அந்தஸ்து கோரிக்கை சாதகமாக பார்க்கப்படுகின்றதென எடுத்துரைத்தார்.

கருத்துரைகளைத் தொடர்ந்து, அகதி விண்ணப்பம் இன்னமும் நிலுவையில் உள்ளவர்கள் - நிராகரிக்கப்பட்டவர்கள் என பலவித சிக்கல்களை எதிர்கொண்டுள்ளவர்களின் கேள்விகளுக்கும் - சந்தேகங்களுக்கும், வழக்கறிஞர்களால் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, அகதிகள் எதிர்கொள்கின்ற நடைமுறைச் சிக்கல்களாக ,உளவளத் துணை - சட்ட வழிகாட்டுதல்கள் - ஆலோசனைகள் - உதவிகள் - பிரென்சு மொழித்துணை ஆகியக கலந்தாய்வின் வழியே கண்டறியப்பட்டது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகார அமைச்சகத்தின் வழியே, மனிதாபிமான உதவிகளுக்கான உறுதுணை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுமென நா.த.அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் தெரிவித்தார்.
தாயக நோக்கிய செயற்பாடுகள் மட்டுமல்ல, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களது நலனிலும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கரிசனை கொண்டுள்ளதென தகவல்துறை துணை அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்தார்.
நா.த.அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதி மகிந்தன் அவர்களினால் பிரெஞ்சு மொழியில் வழிநடத்தப்பட்ட இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், அகதிகள் விவகாரத்தில் ஈடுபட்டுவரும் வழங்கறிஞர்கள் - மொழிபெயர்பாளர்கள் - எழுதுனர்கள் - சமூகஆர்வலர்கள் என பலரும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.
முகப்பு
No comments:
Post a Comment