Friday, June 24, 2011

தன்னை மின்சார நாற்காலியில் ஏற்ற சிலர் முயற்சிக்கின்றனராம்! கலங்கி நிற்கும் மஹிந்தர்

இலங்கைக்கு எதிராக அனைத்துலக மட்டத்தில் சதித்திட்டங்கள் தீட்டப்படுவதால், எந்த நேரமும் விழிப்பான நிலையில் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஸ எச்சரித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பட்ட சில நிறுவனங்கள் இலங்கையின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அனைத்துலக அளவில் பரப்புரைகளை செய்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

வெளியுலக சக்திகள் எதைச் செய்தாலும், இலங்கையின் பெயரைக் காப்பாற்றுவதற்காக அனைவரும் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையிலிருந்து தீவிரவாதத்தை அடியோடு அழிப்போம் என்று நாம் கூறிய போது எம்மைப் பார்த்து சிலர் ஏளனம் செய்தனர்.  ஏளனம் செய்தவர்களே தற்போது இலங்கையின் பெயரைக் கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

அத்துடன் போர்க் குற்றச் சாட்டுகளின் பேரில் தன்னை மின்சாரக் கதிரையில் ஏற்றுவதற்கு அனைத்துலக மட்டத்தில் சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. I support Mahintha and other sinhala Governments because there was no deep cruelty under their regime. These people who try to destroy theoeace process of Srilanka are primitive loewr quality potentials that you can find in the Nature which tries to breed itself by cruel attack to fine good quality potentials.

    These people will mbe destroyed by powerful western high quality western Governments who understand the Nature of the problem and attacking the root cause of the problem.

    ReplyDelete