Sunday, July 03, 2011

வடக்கில் சுமார் 200000 பேர் மீள் குடியேறவில்லை: ஜநா அகதிகள் முகவரகம்


வடக்கில் சுமார் 200000 இடம்பெயர் மக்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படவில்லை என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அகதிகள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நம்பகரமான தரவு மூலங்களின் அடிப்படையில் இந்த புள்ளி விபரத் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் அதிகாரி எலினா பெர்ட்டெரி தெரிவித்துள்ளார்.

புத்தளம் பிரதேசத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மீள் குடியேற்றப்பட்டால் இந்த எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் 102000 பேரும், புத்தளத்தில் 55400 பேரும், வவுனியாவில் 37000 பேரும் இன்னமும் மீள் குடியேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.

மீள்குடியேறுவோருக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தலா 25000 ரூபா வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment