Thursday, July 28, 2011

ரூ.2014கோடிக்கு யுடிவி-யை வாங்கிய வால்ட் டிஸ்னி: தமிழ் சினிமாவுக்கு நல்ல எதிர்காலம்!

தமிழ் உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள பொழுதுபோக்கு துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் முக்கிய நிறுவனமான யுடிவி-யை ரூ.2014 கோடிக்கு வால்ட் டிஸ்னி நிறுவனம் வாங்கியுள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமாவின் தரம் உயர நல்ல வாய்ப்பாக இது அமைந்திருக்கிறது. ஏற்கனவே யுடிவி நிறுவனத்தின் 50.44 பங்குகளை வால்ட் டிஸ்னி நிறுவனம் வாங்கி இருந்தது.



இந்நிலையில் மீதமுள்ள பங்குகளையும் ரூ 1000 வீதம் டிஸ்னி நிறுவனம் வாங்க முடிவு செய்து ஒப்பந்தமும கையழுத்தானது. யுடிவியின் புரமோட்டர்களான ரோனி ஸ்க்ரூவாலா மற்றும் அவரது குடும்பத்தினர் வசமுள்ள பங்குகளையும் சேர்த்து வாங்கிக் கொள்கிறது டிஸ்னி.

இதன் மூலம் புதிதாக 454 மில்லியன் டாலர் அதாவது ரூ 2014 கோடியை முதலீடு செய்கிறது வால்ட் டிஸ்னி.

பாலிவுட் மட்டுமல்லாது சமீபத்தில் கோலிவுட்டில் கால்பதித்தது யுடிவி. இப்போது இந்த நிறுவனம் டிஸ்னி வசம் செல்வது, தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போக்கை உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

யுடிவி வெளியிட்ட தெய்வத்திருமகள் படம் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதுபோக இந்நிறுவனம் அடுத்து வெளியிட இருக்கும் வேட்டை, வழக்கு எண் 18/9 மற்றும் கும்கி படங்களின் உரிமையையும் யுடிவி பெற்றுள்ளது.

இந்தப் படங்கள் இனி வால்ட் டிஸ்னி பேனரில் வெளியாகும் எனத் தெரிகிறது. அதேபோல், யுடிவியின் நேரடித் தயாரிப்பில் உருவாகும் முகமூடி படமும் வால்ட் டிஸ்னி தயாரிப்பாக வெளியாகிறது.

No comments:

Post a Comment