Thursday, July 28, 2011

நெதர்லாந்து ஊடகவியலாளர்கள் சனல் 4 காணொளி தொடர்பான சாட்சியங்களை சேகரிக்க சென்றனராம்!


சனல் 4 தொலைக்காட்சியின் காணொளி தொடர்பாக சாட்சியங்களை கண்டறிவதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த நெதர்லாந்து வானொலியின் (Radio Netherlands Worldwide) பிரதிநிதிகள் இருவர் பொலிஸாரின் விசாரணைகளை அடுத்து விடுவிக்கப்பட்டதாக திவயின தெரிவித்துள்ளது.


சுற்றுலாப் பயணிகள் போல் சென்றிருந்த இந்த வெளிநாட்டவர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில், முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் இரகசியமான பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த போது, வடக்கில் உள்ள புலனாய்வுப் பிரிவினருக்கு அது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

தாம் சுற்றுலாப் பயணிகள் என இவர்கள் கூறிய போதிலும், பின்னர் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்களை அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று வடக்கிற்கு அனுப்பியிருந்தமை தெரியவந்துள்ளது எனவும் திவயின மேலும் தெரிவித்துள்ளது.

நெதர்லாந்து வானொலியின் இரண்டு ஊடகவியலாளர்கள், யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த போது, அச்சுறுத்தல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டதுடன், அவர்களுடைய உடைமைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெதர்லாந்து ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் சுயாதீனமான செய்தி சேகரித்தலை அனுமதிக்கத் தயாரில்லாத அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத்தான் பிரதிபலிக்கின்றது எனவும் இலங்கையில் உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment