Tuesday, August 09, 2011

செஞ்சோலை படுகொலையின் 5ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுக்கு பிரான்ஸ் தமிழ் மகளிர் அமைப்பு அழைப்பு!


கடந்த 2006 இல் செஞ்சோலை பிள்ளைகளின் மீது சிங்கள இனவாத அரசின் வான் படையினரால் குண்டு வீச்சு நடத்தப்பட்டு 61 செஞ்சோலை மாணவிகள் பரிதாபகரமாக உயிரிழந்து வரும் 14.08.2011 ஞாயிற்றுக்கிழமை 5 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன.


அன்றைய தினம் பாரிஸ் Trocadéro  பகுதியில் பிற்பகல் 3 மணிக்கு  பிரான்ஸ் தமிழ் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் நினைவு வணக்க நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக  பிரான்ஸ் தமிழ் மகளிர் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று செஞ்சோலை பிள்ளைகள் இல்லத்தில் போடப்பட்ட குண்டுகளில் எமது 61பிள்ளைகள், சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். எந்த மனித நேயமும் நினைத்து பார்த்து கொள்ள முடியாத படுகொலை.
அந்த கொலைக்கு பின் மனித நேயம் உள்ளவர்கள் தாம் செய்த தவறுகளை நினைத்து மனம்வருந்துவார்கள்.

ஆனால் மனித நேயம் அற்ற சிறிலங்கா அரசு அந்த கொலைக்கு நியாயம் கற்பிக்கிறது.

முள்ளிவாய்காலில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை கொலை செய்து விட்டு அதற்கு மேல் வெற்றிவிழா கொண்டாடுகிறது.

நாம் இவற்றை பார்த்து என்ன செய்யப்போகிறோம் ?

இன்று எமது தமிழ் நாட்டு உறவுகள் போராட்டங்களை முன்னகர்த்தி கொண்டு செல்கிறார்கள், இன்று உலகம் தமிழர்களை பற்றி கதைக்கிறது. அவர்கள் இன்று தமிழீழ மக்களைப் பற்றிக் கதைப்பதற்கு நாம் செய்த தியாகங்கள் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த, காணாமல்போன 146 679 உறவுகள்.
அதற்கு முதல் செஞ்சோலையில் 61 சகோதரிகள், அதற்கும் மேல் எண்ணற்ற சகோதர சகோதரிகள்.
இவர்கள் செய்த தியாகங்களுக்கு நீதி வேண்டாமா?

எல்லோரும் ஒன்றாக வரும் ஆகஸ்ட் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு

பாரிஸில் Trocadéro Metro (ligne 9) க்கு அருகில் அமைந்துள்ள மனிதவுரிமை மையத்தில் ஒன்றுகூடி எமது சகோதரிகளை நினைவு கூர்ந்து,
இன்று மாறி வரும் உலகத்துடன் சேர்ந்து. நீதி கேட்டிடுவோம்.

தமிழ் மகளிர் அமைப்பு- பிரான்ஸ்
தொடர்பு : 06 10 73 50 18



No comments:

Post a Comment