Tuesday, August 09, 2011

போர்க் குற்றங்கள்: புதிய ஆதாரங்களை இன்று வெளியிடுகின்றது ஹெட்லைன் ருடே

இந்தியத் தலைநகர் புதுடில்லியைத் தளமாகக் கொண்டுள்ள 'ஹெட்லைன் ருடே' தொலைக்காட்சி இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான இரண்டு மணி நேரங்களைக் கொண்ட புதிய ஆவணப்படம் ஒன்றை இன்று செவ்வாய்கிழமை இரவு ஒளிபரப்பவுள்ளதாக அறிவித்திருக்கின்றது.
பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட 'இலங்கையின் கொலைக்களங்கள்' என்ற ஆவணப் படத்தை 3 நாட்கள்
தொடர்ச்சியாக ஒளிபரப்பி இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஹெட்லைன் ருடே இன்றிரவு I witnessed Genocide: Inside Lanka's Killing Fields என்ற ஆவணப்படத்தை ஒளிபரப்பவுள்ளது.
பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்ட் பகுதிகள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீதான மீதான எறிகணை வீச்சு, விமானக்குண்டுத் தாக்குதல், கொத்தணிக் குண்டு வீச்சு மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் பலாத்காரம் போன்ற விடயங்கள் பற்றிய கண்ணால் கண்ட சாட்சியங்கள் இந்த நிகழ்வில் ஒளிபரப்பப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 க்கு இது ஒளிபரப்பாகும்.

No comments:

Post a Comment