Thursday, August 25, 2011

அகதிகளை பொறுப்பேற்க நியூசிலாந்து இணக்கம்! 88 இலங்கை அகதிகளை ஏற்க மறுப்பு

அவுஸ்திரேலியாவில் அகதிகள் மத்திய நிலையங்களில் உள்ள அகதிகளை பொறுப்பேற்க நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ இணக்கம் தெரிவித்துள்ளார்.

எனினும், கடந்த மாதம் நியூசிலாந்தை நோக்கி வந்தபோது இந்தோனேசியாவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 88 இலங்கை அகதிகளை பொறுப்பேற்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.


ஏனெனில், அவர்கள் நியூசிலாந்தை நோக்கி பயணித்தார்கள் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என பிரதமர் ஜோன் கீ குறிப்பிட்டுள்ளார்.

அவர்களை நியூசிலாந்து வரவேற்காது என்பதுடன் நியூசிலாந்து அவர்களுக்கு பொறுப்பேற்காது என அவர் தனது நிலையை மறுபடியும் உறுதிப்படுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆட்கடத்தல் தொடர்பில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடனுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்த விரும்புவதாக அவர் தெரிவித்தார். எனினும் அகதிகளைக் கொண்ட படகு தொடர்பில் விழிப்புடன் இருப்பதாகவும் குறிப்பாக அதுகுறித்து எதுவும் நடப்பதற்கில்லை என்றார்.

அவுஸ்திரேலியாவில் அகதிகள் மத்திய நிலையங்களில் உள்ள அகதிகளை பொறுப்பேற்பதில் பேச்சுவார்த்தைகளை நடத்த விரும்புவதாகத் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நியூசிலாந்தில் அகதி முகாம்களை நடத்தும் எண்ணம் தமக்கு இல்லை எனவும் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் உள்ள அகதி முகாம்களில் இருந்து, வருடாந்தம் 750 அகதிகளை கோட்டா முறையில் பொறுப்பேற்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அந்த அகதிகள், ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கையின் அடிப்படையில், நியாயமான அகதிகள் என தம்மை நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment