Monday, August 15, 2011

இந்தியப் பாராளுமன்றத்தில் இலங்கைத் தமிழர் விவகாரம் நாளை விவாதத்திற்கு வருகிறது

இந்தியப் பாராளுமன்றம்இந்தியப் பாராளுமன்றத்தில் நாளை 16ஆம் திகதி இலங்கை தொடர்பாக குறுகிய கால விவாதம் இடம்பெறவுள்ளது.போருக்குப் பின்பு இலங்கைத் தமிழர்களின் மீள்குடியேற்றம், நிவாரணப் பணிகள் மற்றும் அவர்களின் நலன்களை மேம்படுத்துவது தொடர்பில் இந்திய அரசாங்கம் எடுத்திருந்த நடவடிக்கைகள் குறித்து இந்த விவாதத்தில் ஆராயப்படும். இந்தியப் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் ஒரே நேரத்தில் இந்த விவாதம் இடம்பெறும். யுத்தத்திற்குப் பின்னரான இலங்கை நிலைவரம் தொடர்பாகத் தமது கருத்துகளை வெளிப்படுத்த எம்.பிக்கள் பலர் ஆவலாக இருக்கின்றனர்.

இலங்கைத் தமிழர்களின் துன்பங்களுக்குத் துரிதமாக அரசியல் தீர்வு காண வேண்டிய தேவையிருப்பது பற்றியும் தமது வலியுறுத்தல்களை அவர்கள் வெளிப்படுத்த விரும்புகின்றனர்.
இதேவேளை ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதற்கும் இலங்கை ஜனாதிபதியைப் போர்க்குற்றவாளியாக அறிவிப்பது தொடர்பிலும் இந்திய மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருந்த நிலையில், இந்தியப் பாராளுமன்றத்தில் இலங்கை விவகாரம் விவாதத்திற்கு எடுக்கப்படுவது முக்கிய அம்சமாகும்.

No comments:

Post a Comment