லண்டனில் வெடித்து உள்ள
கலவரத்தை அடக்க பிரித்தானிய அரசால் முடியாமல் உள்ளது என்று தெரிவித்து
உள்ளார் இலங்கையின் பாதுகாப்பமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ. இவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறி உள்ளார்.
இவர் இது குறித்து மேலும் குறிப்பிடுகையில் சொந்த பிரஜைகள் மற்றும் சொத்துக்கள் ஆகியோரை பாதுகாக்க பிரிட்டன் அரசு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்க வேண்டும், பிரித்தானிய அரசினாலோ அல்லது பொலிஸாலோ கலவரத்தை முறையாக அடக்க முடியாது உள்ளது.
எனவே சரியான முறையில் தலையிட்டு, உரிய நடவடிக்கைகளை எடுத்து பிரஜைகள், சொத்துக்கள் ஆகியோரை பாதுகாக்க உடன் நடவடிக்கை எடுங்கள் பிரிட்டன் அரசை கோருகின்றேன் என்றார்.
No comments:
Post a Comment