Saturday, August 27, 2011

டொமினிக்கன் குடியரசில் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான இரு கப்பல்கள்?


தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் டொமினிக்கன் குடியரசில் இருந்து கனடாவுக்கு பொருட்களை ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரு கப்பல்களும் புலிகளுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை ஏற்றி, இறக்குவதாக கனடாவில் மாற்றுக்கருத்துள்ள தமிழர் அமைப்புகளின் தகவல்கள் தெரிவிப்பதாக திவயின என்ற சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.


டொமினிக்கன் குடியரசில் இந்த இரண்டு கப்பல்களும் வர்த்தக கப்பல்களாக பதிவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கனடாவில் மாத்திரம் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 627 வர்த்தக நிலையங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறான வர்த்தக நிலையங்களில் மிகவும் விசாலமான உணவகம் ஒன்றை பாபு என்பவர் நடத்தி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment