நாட்டில் நிலவிய பயங்கரவாம் முடிவுக்குக்
கொண்டுவரப்பட்டு இரண்டு வருட காலம் நிறைவடைந்துள்ள நிலையில் அவசரகாலச்
சட்டத்தினை நீக்கவுள்ளமையை பிரித்தானியா வரவேற்பதாக கொழும்பிலுள்ள
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானமானது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான முக்கிய நடவடிக்கையாகவும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட ஒரு முன்னேற்றப் படிமுறையெனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டத்தினை நீக்குவது தொடர்பாக பிரித்தானியா தொடர்ந்து அவதானித்து வருவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment