பயங்கரவாத
ஆபத்து உச்ச நிலையில் காணப்படுகின்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா அடையாளம்
காணப்பட்டு உள்ளது. பயங்கரவாத ஆபத்து சுட்டெண் - 2011 ஐ வெளியிட்டு
உள்ளது பிரித்தானிய ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான Maplecroft. கடந்த
ஏப்ரல் 01 ஆம் திகதிக்கு முன்னரான 12 மாத நிலைமைகளை கருத்தில் கொண்டு
இச்சுட்டெண் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதில் 197 நாடுகளின் பயங்கரவாத ஆபத்து
நிலைமைகள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன. 20 நாடுகள் பேராபத்து
நிறைந்தவையாக காட்டப்பட்டு உள்ளன. இதில் இந்தியா 17 ஆவது இடத்தில்
உள்ளது. பாகிஸ்தான் 02 ஆவது இடத்தில் உள்ளது. ஓரளவு ஆபத்து நிறைந்த
நாடுகளில் ஒன்றாக பிரிட்டன் காட்டப்பட்டு உள்ளது. 38 ஆவது இடத்தில் உள்ளது.
இலங்கையை காட்டிலும் பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள்
பாதுகாப்பற்றவை, பயங்கரவாத ஆபத்து உடையவை என்று காட்டப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment